Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது காணாமற்போன 16,000 தமிழ் மக்களின் நிலைமை குறித்த விவரத்தை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களாக நடத்திய ஆய்வு அறிக்கையை சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு, கொழும்பில் வெளியிட்டது.

34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் இறுதிக்கட்டப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் 16,000 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களது நிலை என்னவானது, தற்போது எங்குள்ளனர் அன்றாட வாழ்க்கைக்கு அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய விரும்புகின்றனர். ஆகையால், காணாமல்போனோரின் நிலை குறித்த முழு விவரங்களை இலங்கை அரச அதிகாரிகள் வெளியிட வேண்டும்.

இலங்கையில் கடந்த 1989ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவை சங்கக் கிளை ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமற்போனதாக கூறப்படும் நபர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களை அந்தக் கிளை பதிவு செய்து வருகிறது.

உலகிலேயே அதிக அளவுக்கு காணாமற்போனவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது. கடந்த 1994ஆம் ஆண்டில் மட்டும், காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் 65,000 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதில், விடுதலைப் புலிகள்- இலங்கை இராணுவத்துக்கு இடையேயான போரின்போது காணாமற்போனோரும் அடங்குவர்.” என்றுள்ளது.

0 Responses to இறுதி மோதல்களில் காணாமற்போனோரின் விபரங்களை இலங்கை வெளியிட வேண்டும்: சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com