Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தலைவர்கள் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் நேற்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1983 ஆம் ஆண்டு ஜீலை 27 திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33ஆவது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோ தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு வவுனியாவில் அஞ்சலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com