Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை குமாரபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன், 24 பொதுமக்களை சுட்டுப்படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆறு இராணுவ வீரர்களும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவின் முன்னிலையில் ஜூரி விசாரணையாக நடைபெற்றது.

ஆறு இராணுவ கோப்ரல்களுக்கும் எதிராக 101 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. சந்தேக நபர்கள் திருகோணமலை இராணுவ முகாமிலிருந்து இருந்து சென்று நிராயுத பாணியாக இருந்த பொதுமக்களை தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ ஆயுதத்தினால் கொலை செய்ததாக சாட்சி விசாரணையில் குறிப்பிடப்பட்டது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற வரலாற்றில் இவர்களுக்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. கொலை செய்யப்பட்டவர்களிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, பிள்ளைகள் உறவினரகள் அடங்குவதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தடயப் பொருட்களாக துப்பாக்கிகள், ரவைகள் இராணுவத்தினருக்கு ஆயுதம் விநியோகித்த ஆவணம். பிரேத பரிசோதனை அறிக்கைகள், சட்ட மருத்துவ அறிக்கை, பகுப்பாய்வு அறிக்கை என்பன முன்வைக்கப்பட்டன. வழக்கில் சாட்சிகளாக 107 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதிவாதிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றே பலரும் எதிர்பார்திருந்தனர்.

ஆயினும், சாட்சியங்களில் குழப்பங்கள் காணப்படுகின்றமையினால் குறித்த ஆறு இராணுவத்தினரையும் விடுதலை செய்ய நீதிபதிகள் ஏகமனதாகச் சிபாரிசு செய்துள்ளனர்.

0 Responses to குமாரபுரம் கூட்டுப் படுகொலை; குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com