வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் நீடித்து வந்த சர்ச்சைகளை அடுத்து, ஓமந்தையிலும், வவுனியாவிலும் இருவேறு பொருளாதார மையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதார மையம் தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஹரிசன் இப்பிரச்சினையைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அதற்குப் பதிலளித்திருந்த பிரதமர், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து அது தொடர்பில் இறுதி முடிவை எடுக்குமாறு அமைச்சர் ஹரிசனைப் பணித்தார். இந்த பிரச்சினை அமைச்சரவையில் நீண்ட நேரம் ஆராயப்பட்ட போது அமைச்சர்கள் சிலர் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர், பொருளாதார நிலையமானது வவுனியா நகரப் பகுதியிலோ ஓமந்தையிலோ அல்லது மாங்குளத்திலோ அமைய வேண்டியுள்ளது. எனினும், இந்த விவகாரம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் வவுனியா மாவட்டத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் வெவ்வேறாக இரண்டு பொருளாதார மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இறுதி முடிவை மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பிரதமர் இதன் போது வலியுறுத்தியுள்ளார். அதனையடுத்து அமைச்சர் ஹரிசன் உடனடியாகவே இது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்கவே வவுனியாவிலும் ஓமந்தையிலும் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் அமையவுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to பொருளாதார மையங்களை வவுனியாவிலும், ஓமந்தையிலும் அமைக்க அமைச்சரவை தீர்மானம்!