பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக உள்ள தெரசா மே (59), அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கவிருக்கிறார்.
பிரித்தானியாவின் இரும்புபெண்மணி என அழைக்கப்படும் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரதமராக பதவியேற்கவுள்ள 2-வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், ராணி எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று கொடுக்கவிருக்கிறார்,
அதன்பொருட்டு, நேற்று கமரூன் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இதில் பேசிய சுகாதார துறை செயலாளர் Jeremy Hunt, இந்த கூட்டம் ஒரு அற்புதமான கூட்டம் ஆகும், கடந்த 6 ஆண்டுகளாக மக்களின் தேவைகளை உணர்ந்து கமரூன் சிறப்பாக செயல்பட்டார் என்று கூறியுள்ளார்
கலாசார செயலாளர் John Whittingdale கூறியதாவது, பிரதமரை வழியனுப்பி வைத்ததால் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைவரும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, மிகவும் சோகத்துடன் காணப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த கமரூன், புதிதாக பதவியேற்கவுள்ள மார்கரெட் தனது பதவியை திறம்பட செய்வார் என கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியா தொடர்ந்து நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து சமீபத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னதாக, பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க ஆதரவு கோரி கமரூன் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், வாக்கெடுப்பின்போது 52 சதவீத மக்கள் பிரிய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
அதன்பேரில், கமரூன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to விடைபெறுகிறார் கமரூன்..