Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திர பிரதேச மாநிலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் துர்கா சக்தி நாக்பாலின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று தகவல் தெரிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் மாவட்ட துணை ஆட்சியராக பதவி வகித்தவர் துர்கா சக்தி நாக்பால். இவர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதாக கூறி மசூதியின் சுற்றுப்புற சுவற்றை இடிக்கக் உத்தரவிட்டதாகவும், இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்படும் நிலை உருவாகியதாகவும் கூறி துர்கா சக்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது உத்திரப் பிரதேச அரசு.

 ஆனால் துர்கா சக்தி நாக்பால் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சிகள் எடுத்ததால்தான் அவரை உத்திரப் பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்தது என்றும் ஒரு தகவல் பரவ இதனால், மத்திய பணியாளர் நலத்துறை வாரியம் உத்திர பிரதேச மாநில அரசுக்கு, துர்காவின் பணியிடை நீக்கத்துக்கான் காரணத்தை விளக்க அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

அதன்படி, 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உத்திரப் பிரதேச அரசு, மத்திய பணியாளர் நலத்துறையிடம் சமர்பித்து விட்ட நிலையில், இனி துர்காவின் விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 Responses to துர்கா சக்தி நாக்பாலின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com