Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும், தாம் அன்று பண்டாரநாயக அவர்களின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும், அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக் கடப்பாடுகள் தமக்குக் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரக்காபொல நகர மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர்மசிறி சேனாநாயக்க அவர்களின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டின் 62 இலட்சம் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து இந்நாட்டை பொறுப்பளித்ததாகவும் அப்பொறுப்பை நிறைவேற்றும்போது முன்நோக்கி பயணிப்பேனன்றி ஒருபோதும் பின்நோக்கி பயணிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 Responses to நாம் சர்வதேசத்தை வெற்றி கொள்கின்றோம்; நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை: மைத்திரிபால

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com