Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரி இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளை சேர்க்க அனுமதி வழங்கியாயிற்றா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்ம மர்மமான முறையில் ஒரு குளத்திலிருந்து பிணமாகக் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என்கிற சந்தேகத்துக்கு கிட்டத்திட்ட 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பதில் இல்லை. ஆனால், வழக்கின் விசாரணை மட்டும் நடந்து வருகிறது.

ஆனால் 'இப்போது சீல் வைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி இயங்க ஆரம்பித்துவிட்டது. கவுன்லிசிங்கில் அந்தக் கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. என்று நம்பிக்கையான தகவல்கள் கசிந்து வருகிறது. அதாவது இப்போது மாற்று மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட செய்தி கசிந்துள்ளது. இது உண்மையா? அப்படியானால் இறந்து போன மானவைகளுக்கு நியாயம் எப்போது கிடைக்கும். இல்லை இவ்வழக்கு பல வருடங்கள் நீடித்து பின்னர் புஷ்வாணமாகிப் போகுமா என்கிற கேள்வி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.

0 Responses to கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.இயற்கை யோகா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியாயிற்றா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com