Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிறு அதிகாலை டெக்ஸாஸ் மாநில நகர்ப் புறமான ஆஸ்டினில் அமைந்துள்ள இரவு விடுதிகளுக்குள் உட்புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பரிதாபமாகப் பலியானதாகவும் 3 பேர் மோசமான படுகாயத்துக்கு உள்ளானதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2:15 இற்கு நடந்த இச்சம்பவத்தின் பின்னணி நோக்கம் என்னவென்று தெரியாத நிலையில் அடையாளம் காணப் படாத துப்பாக்கிதாரியும் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் எத்தனை பேருக்கு குண்டு பாய்ந்தது என்பதும் உடனே தெரிய வரவில்லை எனவும் ஆஸ்டின் போலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆயினும் இப்போலிசார் தமது டுவிட்டர் தளத்தில் குறித்த துப்பாக்கிச் சூடு பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்டதாகவும் அனைத்தும் ஒரே பிரதேசத்தில் நிகழ்ந்ததாகவும் ஆனால் நிலமை தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

ஆஸ்டின் அவசர மருத்துவ சேவைப் பிரிவும் தமது டுவிட்டரில் ஆஸ்டின் மக்கள் 6 ஆம் இலக்க வீதி உட்பட குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

0 Responses to டெக்ஸாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலி!:மூவர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com