Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் தெற்கு மாநிலமான குவாங்டொங் இனை செவ்வாய்க்கிழமை நிடா என்ற தைபூன் புயல் கடக்கவிருப்பதாகவும் இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படியான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இனை  சீன அரசு அமுல் படுத்தியிருப்பதாகவும் சீன ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

NMC எனப்படும் சீனாவின் வானிலை  அவதான நிலையம் இந்த புயல் எச்சரிக்கையின் 4 அளவுகளில் 2 ஆவது மிகப் பெரிய அளவான ஆரஞ்சு நிற சமிக்ஞை வெளியிட்டுள்ளது. மேலும் நிடா புயல் கடக்கும் போது வலுவான காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் என்றும் குவாங்டொங், ஃபுஜியான்  மற்றும் ஹைனான் மாகாணங்களின் கடற்கரைப் பகுதியில் இவை இரண்டும் இணைந்து நிலப்பரப்பை துவம்சம் செய்யும் என்றும் கூட எச்சரிக்கப் பட்டுள்ளது.

தற்போது பிலிப்பைன்ஸில் நிலை கொண்டுள்ள நிடா புயல் சீனாவின் வர்த்தக மையமான ஹொங் கொங் இனையும் தாக்கும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வருடம் சீனாவைத் தாக்கும் 4 ஆவது வலிமையான தைஃபூன் நிடா ஆகும். இவ்வருடம் ஜூன் மாதம் முதற்கொண்டு இன்று வரை சீனாவைத் தாக்கிய தைஃபூன் புயல்களால் 800 பேர் பலியாகி உள்ளனர். 2011 ஆம் ஆண்டுக்குப் பின் சீனாவில் அதிகம் பேர் பலியான இயற்கை அனர்த்தம் இதுவாகும்.

மேலும் ஜூலை மாதத் தொடக்கத்தில் சீனாவைத் தாக்கிய தைஃபூன் நெபார்டாக் இனால் 420 000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது உடன் ஃபுஜியான் மாநிலத்தில்  மட்டும் 7.1 பில்லியன் யுவான் இழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to செவ்வாய்க்கிழமை சீனாவைக் கடக்கும் நிடா புயல்!:ஆரஞ்சு நிற எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com