Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போதைய அரசாங்கம் காணாமற் போனோர் பிரச்சினை தொடர்பாக முக்கியத்துவம்கொடுத்து முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை நிச்சயம் உறுதியாகச் சொல்லமுடியும்.

அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும், சிவில் அமைப்பின்ஊடாகவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் இந்தப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண முடியுமென நான் நம்புகின்றேன் எனத்தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க ஒருங்கிணைப்பின்தலைவியுமான சந்திரிக்காபண்டாரநாயக்க குமாரதுங்க.

இன்று வியாழக்கிழமை யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த முன்னாள்ஜனாதிபதியும், நல்லிணக்க ஒருங்கிணைப்பின் தலைவியுமான சந்திரிக்காபண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் சிவில் சமூகமட்டத்திலுள்ள பல்வேறுபட்ட தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர் .

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல்-01.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில்காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களைச் சந்தித்துக்கலந்துரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் காணாமற் போனோர் தொடர்பானபிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கத்திலும் தீர்வு காணப்படாமை தொடர்பில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது கடும் அதிருப்தியையும், கவலையையும்வெளியிட்டனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சந்திரிக்கா மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள்வருமாறு,

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பான சில ஆணைக்குழுக்களை அமைத்து ஓரளவுக்குக் காணாமல் போன சில நபர்கள் தொடர்பான தகவல்களைப்பெற்றுக் கொள்ள முடிந்தது . ஆனாலும், அவர்களது தேவைகள் இன்னும்முழுமையடையவில்லை.

எனவே தான் புதிய அரசாங்கம் காணாமற் போனவர்களுக்கானஅலுவலகமொன்றை அமைப்பதற்குத் தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளது.

குறிப்பாக சர்வதேசத்தினதும் , ஐக்கிய நாடுகள் சபையினுடையபங்களிப்புடனும் இது தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் வாதிகளினதும் ஒத்துழைப்புஇதற்குக் கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச குழு மட்டும் தான் இதற்குத்தெரிவிக்கின்றது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களினது அறிக்கைகளையும், புதிதாகச் சிலசாட்சிகளையும் சேர்த்துக் கொண்டு காணாமற் போனவர்களில் உயிருடனிருப்பவர்கள்,உயிருடன் இல்லாதவர்கள் தொடர்பான விபரங்களையும், நஷ்ட ஈடுகள் வழங்குவதுதொடர்பான உறுதியான முடிவுகளை வழங்கும் நோக்குடன் தான் காணாமற் போனோர்தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இன்று எப்படியாவது ஒரு உறுதிமொழியானபதிலை வழங்குமாறு நீங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள்.

காணாமற் போனோரின்பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையாகக் காணப்படாமையால் இந்தச்சந்தர்ப்பத்தில் இதுதொடர்பான பிரச்சினைக்கு உரிய பதிலை என்னால் வழங்கமுடியாதுள்ளது.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆணைக் குழுக்களின் அறிக்கைகளையும்,புதிதாகச் சில சாட்சியங்களையும் எடுத்துக் கொண்டு அந்தத் தேடல் மூலம் தான்இதற்கான பதிலை என்னால் வழங்க முடியும். அவ்வாறில்லாமல் ஏமாற்றமடையக்கூடியவாறான பதில்களை என்னால் வழங்க முடியாது.

காணாமற் போனவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் தங்களது உறவுகள் இறந்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றநம்பிக்கையுடன் தானிருக்கிறார்கள்.

இதன் காரணமாக அவர்களுக்கு மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான விருப்பமுமில்லை.

ஆனால், மரணச்சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளாத காரணத்தால் சில கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாகவுள்ளது.

இதற்காகத் தற்காலிகமாகச் சான்றிதழ்களைவழங்குவதற்கான நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

புதிய இணைப்பு

போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு அவ்வாறான குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தண்டணைகள் வழங்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் அவ்வாறான பிரச்சினைகள் மீளவும் உருவாகாமல் மக்களுடைய மனங்களில் உள்ள போர் வடுக்களை அகற்றலாம்.

அதன் ஊடாக நாங்கள் அனைவரும் எங்களுக்கே உரித்தான தனித்துவங்களுடன் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாங்குடன் வாழமுடியும்.

மேற்கண்டவாறு முன்னாள் ஜனாதிபதி(இலங்கை) சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

இன்றைய தினம் காலை யாழ்.வந்த அவர் மாலை 3மணிக்கு வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு மழை நீர் சேமிப்பு தாங்கிகளை கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரை யாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய எந்தவொரு பணியையும் ஆற்றவில்லை.

இதனால் தமிழ் மக்கள் மனங்களில் உண்டான கோபம் மற்றும் விரக்தியே பாரிய போர் உண்டாக காரணமானது.

அவ்வாறான நிலையினை உண்டாக்க விரும்பாத அரசாங்கமே இப்போது ஆட்சியில் இருக்கின்றது.

இதேவேளை யாழ்.குடாநாட்டில் உண்டாகியிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு இந்த மழைநீர் சேமிப்பின் ஊடாக ஓரளவுக்கு தீர்வு கிடைத்திருக்கின்றது.

தொடர்ச்சியாக இந்த பிரச்சினையை தீர் ப்பதற்காக கிளிநொச்சி- இரணைமடு குளத்தை புனரமைத்து யாழ்.குடாநாட்டுக்கு நீர் கொண்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

இதேவேளை கடந்த 30வருடங்களாக இடம்பெற்ற அழிவுகள் பாரதூரமானவை. அகவே எதிர்வரும் காலத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.

அதற்கு சிங்கள மக்களுக்கு கிடைக்கின்ற அனைத்தும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அவ்வாறான நிலை யினை உண்டாக்க இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது.

மேலும் காணாமல்போ னவர்கள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. அதன் ஊடாக நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கும் காணாமல் போனவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வினை காண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் காலத்திற் கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எவையும் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய எந்தவொரு பணியையும் ஆ ற்றவில்லை.

அதனால் தமிழ் மக்களுடைய மனங்களில் உண்டான கோபம் மற்றும் விரக்தியே போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

இதேபோல் போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதன் ஊடாக குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அது எதி ர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளும் என்பதுடன். மக்களுடைய மனங்களில் உள்ள போர் வடுக்களை ஆற்றவும் உதவும்.

மேலும் எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் எங்களுடைய தனித்து வங்களை பேணி இலங்கையர்கள் எண்ணப்பாங்குடன் வாழ்வதற்கும் உதவும் என்றார்.

0 Responses to காணாமற் போனோரின் பிரச்சினைக்கு இரண்டு வருடங்களில் தீர்வு!- சந்திரிக்கா நம்பிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com