Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக  முக்கியமாக காரிவி  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு விழாவை புதுமானத் தம்பதியர் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மிகவும் உற்ச்சாகத்துடன் கொண்டாடி  மகிழ்வது வழக்கம். காவிரி நதியின் படித்துறையில் காவிரி அம்மனுக்கு கருவளையல் ,பழங்கள்,மஞ்சள் கயிறு, காப்பரிசி கிளறி படையலிட்டு, பின்னர் கருவளையல் வைத்த அந்த படையலை ஆற்றில் விட்டு வழி படுவது மக்களிடையே தொன்றுத தொட்டு தொடரும் பழக்கமாக இருந்து வருகிறது.

புதுமானத் தம்பதியர் இன்று தங்களது தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்வதும் வழக்கம். கல்யாணமாகாத இளம்பெண்கள், தங்களது விரைவில் திருமணமாக வேண்டி படையலிட்ட மஞ்சள்  கயிற்றை  பெரியவர்களின் கையால் அணிந்துக்கொள்வதும் வழக்கம். இப்படியாக காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டி வருகிறது.

0 Responses to இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com