Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகாரில் கள் விற்பனைக்கு அனுமதி..

பதிந்தவர்: தம்பியன் 02 August 2016

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள் விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பீகாரில் முதல்வராக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார் அரசு அங்கு மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அறிவித்தது. அப்போது கள் விற்பனைக்கும் சேர்த்து தடை விதிக்கப்படும் என்று நிதீஷ் குமார் அறிவித்த நிலையில், கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று, ராஷ்ட்ரிய ஜனதா கட்சி வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு சட்டத்தை நிறைவேற்றிய 24 மணி நேரத்திற்குள் கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளித்து  நிதிஷ் அரசு அறிவித்துள்ளது.

பிஹாரில் மதுவிலக்கு தொடர்பான மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், யார் வீட்டிலாவது மது பானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அங்குள்ள பெரியவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை நிச்சயம். அவர்களுக்கு ஜாமீனும் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.

0 Responses to பீகாரில் கள் விற்பனைக்கு அனுமதி..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com