இன்று உலக தாய்ப்பால் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தொடங்கி 7ம் திகதி வரை இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என்று பல்வேறு அமைப்பினர் நடத்தி, மக்களுக்கு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவார்கள்..
உலகில் கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு, குழந்தைகளுக்கான தாய்ப்பால்தான் என்பதால், இந்த கலப்படமில்லாத விலை மதிப்பில்லாத தாய்ப்பாலை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் எக்காரணம் கொண்டும்,உங்களது குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். தாய்ப்பால் கொடுக்காத தவிர்ப்பதன் மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையின் உணவு உரிமையைப் பறித்துவிடாதீர்கள்.

0 Responses to இன்று உலக தாய்ப்பால் தினம்