Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அதனை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், நிதி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஊடகவியலாளரொருவர்  எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குண்டுகளை வைத்து நாசகார வேலைகளில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளே. அவ்வாறான வேலையை உதய கம்மன்பில செய்தால், அவரும் பயங்ரவாதியே.

கடந்த வாரம் இந்தியா இலங்கைக்கு ஒரு தொகை அம்பியூலன்ஸ் வண்டியை வழங்கியபோது இந்திய வைத்தியர்களுக்கும் தாதிகளுக்கும் சாரதிகளுக்கும் இலங்கையில் தொழில் வாய்ப்பு வழங்கப்போவதாகப் புரளியைக் கிளப்பினர். இப்போது என்ன நடந்தது?

யுத்த குற்ற விசாரணைக்காக ‘ஹைபிரிட்’ நீதிமன்றம் அமையப் போவதாக புரளிகளைக் கிளப்பினர். அவ்வாறு எதுவும் இடம்பெற்றதா? அது போன்றுதான், ஒன்று இடம்பெறும் முன்பே அதைப்பற்றி விமர்சிப்பது புரளியைக் கிளப்புவது சிலரது தொழில். அதையே இப்போதும் செய்கின்றனர்.

அதேபோன்றுதான் இலங்கை – இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வரும்போதே அதைப்பற்றி விமர்சித்தும் முடித்துவிட்டார்கள். அதைக் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லை.” என்றுள்ளார்.

0 Responses to குண்டு வைக்கப்போவதாகக் கூறும் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி: லக்ஷ்மன் யாப்பா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com