இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அனுமானின் வாலில் தொங்கிக் கொண்டேனும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்ற கூட்டு எதிரிணியினரால் (மஹிந்த ஆதரவு அணி) இவ்வாறான போலியான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை ரந்திவெல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறுவதாக அமைச்சர் கபீர் ஹாசீம் அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே, அதனை, லக்ஷ்மன் கிரியெல்ல மறுத்துரைத்துள்ளார்.

0 Responses to இலங்கை - இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல