Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின் விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியர்களின் பரிசோதனை அவசியம் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 58வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. அதிலேயே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் உயிரிழந்துள்ளவர்களில் அநேகர் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் கடந்த நாட்களில் கவனம் பெற்றிருந்தது. குறிப்பாக, முன்னாள் போராளியொருவர் தம்மை புனர்வாழ்வு முகாம்களில் வைத்திருக்கும் போது விச ஊசி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியர்களின் பரிசோதனை அவசியம் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

0 Responses to முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியப் பரிசோதனை அவசியம்; வடக்கு மாகாண சபை தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com