உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய பொருளாதாரக் கொள்கையினை விரைவில் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதான பல்தேசிய கம்பனிகள் நூறுக்குள்ளும் முதல்தர தொழில் முயற்சிகள் 500க்குள்ளும் உள்ளடங்கக்கூடிய சொங்ஜிங் வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கம்பனியை சந்தித்தார். இங்கு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் சிறிய வர்த்தக சந்தையே உள்ளதால் உலகில் பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திட இலங்கை எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் இலங்கையூடாக மிகவும் பரந்த வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கை விரைவில் வெளியிடப்படும்: ரணில்