Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் கண்டமாதிரியும் புலம்பி வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்தில் முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்திலேயே யுத்த களத்தில் இராணுவத்தினர் படுதோல்விகள் மூன்றை சந்தித்தனர். 1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவப் படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் வன்னியிலிருந்த ஒட்டுமொத்த இராணுவப்படைத்தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆனையிறவு படைத்தளம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. இம்மூன்று சம்பவங்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்திலேயே இடம்பெற்றன. எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புலிகளின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட மூளை பாதிப்பினாலேயே அவர் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கிறார்.” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்காவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது; அதனால் புலம்புகின்றார்: உதய கம்மன்பில

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com