Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களை நடத்துவது தொடர்பில்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் எனச் சென்னையில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு தருவதில்லை எனவும், இந்த விளையாட்டுத் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, அனைவரும் ஏற்றுக் கொண்டு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு என்பது மறுப்பதற்கில்லை. அதேவேளை  அது ஒரு ஆபத்தான  விளையாட்டு என்பதையும் கவனிக்க வேண்டும்.  தமிழக  அரசியல் காரணங்களுக்காக ஜல்லிக்கட்டு விளையாட்டு கவனம் பெறுகிறது. அரசியல்வாதிகள் இவ்வாறான அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் குறித்துச் சிந்திக்க வேண்டும்  எனவும் தெரிவித்திருந்தார்.

0 Responses to ஜல்லிக்கட்டு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது : மேனகா காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com