Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்குவது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். 

கோவையில் புத்தகக் கண்காட்சி ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றினார் நீதிபதி சந்துரு. அப்போது, புதுப்புது புத்தகங்களை வாசிப்பது என்பது அறிவை விசாலமடையச் செய்யும் என்று கூறியுள்ளார். பிள்ளைகளுக்கு வாசிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்துவதும், வாசிக்கும் திறனை மேம்படுத்துவதும் பெற்றோர்-ஆசிரியரின் பங்கு என்றும் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக நூலகங்களில் புதிய புத்தகங்கள் வாங்கப்படுவது இல்லை என்றும், எனவேதான் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு புதிய புத்தகத்தில் பதிப்பு என்பது 50 ஆயிரம் ஒரு லட்சம் என்று இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் வெறும் ஆயிரம், 2 ஆயிரம் என்கிற அளவில் மட்டுமே  புத்தகப் பாதிப்புக்களின் எண்ணிக்கை இருக்கிறது. இது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதி சந்துரு கூறினார்.

0 Responses to தமிழக நூலகங்களில் கடந்த மூறு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் இல்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com