Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவில் நிதியுதவியோடு அமைக்கப்பட்டு வந்து; இடைநிறைத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் பெயர் 'கொழும்பு சர்வதேச நிதி நகரம்' என மாற்றப்பட்டுள்ளது. 

அத்தோடு, புதிய ஒப்பந்தமொன்றும் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்துக்கும், சீன நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மேல் மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையும், சீனாவின் சார்பில் சீனாவின் கொழும்பு போர்ட் சிற்றி நிறுவனம், கொழும்பு போர்ட் சிற்றி திட்ட நிறுவனம் ஆகியனவும் கைச்சாத்திட்டுள்ளன. அத்தோடு, புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

சீன நிதியுதவியோடு 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 'கொழும்பு சர்வதேச நிதி நகரமாக’ மாறியது கொழும்பு துறைமுக நகரம்; புதிய ஒப்பந்தமும் கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com