Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ எனும் ஆய்வு நூல் நாளை சனிக்கிழமை (ஒகஸ்ட் 06, 2016) வவுனியாவிலும், பிரித்தானியாவின் இலண்டனிலும் வெளியிடப்படவுள்ளது. 

வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.

இலண்டனில், TRINITY COMMUNITY CENTRE, EAST AVENUE, EASTHAM.  E12 6SG, LONDON என்ற முகவரியில் நாளை மாலை 04.30 மணிக்கு நூல் வெளியீடும், நூலாசிரியருடனான உரையாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் உருவான அனைத்து அரசியல் யாப்புக்களுமே புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமாக வடிவமைக்கப்பட்டது என்று கூறும் இந்நூல் அனைத்து யாப்புக்களையும் அதற்கான நீண்ட வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஆராய்கிறது.

0 Responses to மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூல் வெளியீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com