Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்பியும்  நடிகையுமான ரம்யா கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு அது  நரகம் அல்ல என்று கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரம்யா மீது கர்நாடக மயிலம் குடகு காவல்நிலையத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மனோகர் பாரிக்கர் கருத்து தவறு என்றும் கூறியதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி நடிகை ரம்யா கோரிக்கை வைத்துள்ளார். தாம் தேச விரோதி அல்ல என்றும் தாம்  தேசியவாதிதான் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் மக்களும் நம்மை போன்றவர்கள்தான்,தாம் தவறாக ஏதும் சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் மக்களை புகழ்ந்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ரம்யா.

0 Responses to தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும்: முன்னாள் காங்கிரஸ் எம்பி ரம்யா கருத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com