Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 68 வருடங்களாக நாட்டினை அழித்து வரும் பொருளாதார நடைமுறைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

“சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்குவரும் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைமையை, மக்கள் தோற்கடிப்பதன் ஊடாகவே தற்பொழுது காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, பொதுவான பெறுமதி சேர் வரி எதிர்ப்புக்கு அப்பால் சென்று தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் சமூக பொருளாதார நடைமுறைக்கு எதிராகப் போராட மக்கள் சகலரும் ஒன்றிணைய வேண்டும்.”  என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்கள் மீது மேலும் வரிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் பெறுமதி சேர் (வற்) வரித் திருத்தம் குறித்த சட்டமூலத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சகலரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

உறுதியான வரிக் கொள்கையைக் கொண்டிருக்காத அரசாங்கம் சாதாரணமாக மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள், சேவைகளுக்கு வரிகளை அறிவிட்டு மேலும் வரிச்சுமையை கூட்டுவதற்கே முயற்சிக்கின்றது.

பெருமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது. நேரடி வரியைவிட மறைமுக வரியை அதிகரித்து வரி முறையில் குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கும் அரசாங்கம், மேலும் மக்களின் வரிச்சுமையை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரும் பெருமதி சேர் வரித் திருத்தச்சட்ட மூலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரிக்க முடியாது. சகலரும் இணைந்து இதனை தோற்கடிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டை அழிக்கும் பொருளாதார நடைமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com