Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனை நடத்துவதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளதாக முன்னாள் விடுதலை புலி போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான துளசி தெரிவித்துள்ளார்.

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடுத்து, யாழ்ப்பாணத்தில் வைத்திய முகாம் நடத்தி வரும் அமெரிக்க விமானப்படையின் மருத்துவக் குழுவை வைத்து, முன்னாள் போராளிகள் சிலரை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலே, முன்னாள்  போராளிகளுக்கான வைத்தியப் பரிசோதனையை நடத்துவற்கு அமெரிக்கத் தூதரம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ் வந்துள்ள அமெரிக்க விமானப் படையின் மருத்துவ பிரிவு முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்த தயார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை நாம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று பெயர்களை பதிவு செய்து இருந்தோம். அதனை தொடர்ந்து மறுநாள்  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி,  முல்லைதீவை  சேர்ந்த 25 போராளிகள் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.

காலை  09.00 மணிமுதல்  அங்கு காத்திருந்தோம். மதியம் ஒரு மணி வரையில் எமக்கான எந்த பதிலும் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் நான் தொலைபேசியில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பின்னர் அவர்கள் கூறி  இருந்தார்கள் ,

முன்னாள்  போராளிகளுக்கான  வைத்தியப் பரிசோதனையை மேற்கொள்ள அமெரிக்க தூதரகம்  மறுத்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க மருத்துவ பிரிவு பரிசோதனைக்கு உரிய  மருத்துவ கருவிகளை கொண்டு வரவில்லை எனவும் , கூறினார்கள்.

முன்னாள்  போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றார்கள் அவ்வாறானவர்களை  வைத்து அரசியல் நடத்தும் போக்கு வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றது. எமது தற்போதைய  கோரிக்கை போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது வெளிவர வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to விச ஊசி விவகாரம்; முன்னாள் போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனை நடத்த அமெரிக்கா மறுப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com