இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சிங்களவர்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நாடும் இழக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், தமிழ்நாட்டினர் இடைவிடாது வடக்கிற்கு வருவார்கள். இதனால் சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டை இழக்கும் ஆபத்து ஏற்படலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது பாலம் நிர்மாணிக்கப்படுமாயின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதனை வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பிலான உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கபீர் ஹசீம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால்; சிங்களவர்கள் நாட்டை இழப்பார்கள்: உதய கம்மன்பில