Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள  சட்டீஸ்கர் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மக்கள் இரு சக்கர மோட்டார் வாகன ஆம்புலன்ஸை வடிவமைத்து உள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தின் சாலைகள் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள், கர்ப்பிணிப் பெண்களின் அவசர கால சிகிச்சை மற்றும் சிறு குழந்தைகளின் அவசர சிகிச்சைகளுக்கு மிகவும் துன்புற்று வந்தனர். அதோடு, மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் வேறு இவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது.  இந்நிலையில்தான் அவசர கால சிகிச்சைக்கு மற்றும் பயணத்துக்கு என்று இரு சக்கர மோட்டார் வாகனத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை மக்கள் வடிவமைத்து  தற்போது பழக்கத்தில் வைத்துள்ளனர். குழந்தைகள் நல அமைப்பான யுனி செஃப் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்க மக்கள் தாங்களாக இந்த அவசர ஆம்புலன்ஸை தயாரித்து உள்ளனர்.

இதில் அவசர சிகிச்சைக்கு என்று முதலுதவிப் பெட்டியும், சில முக்கிய மருந்துகள் உள்ள பெட்டியும் இடம்பெற்று உள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கர்ப்பிணிப் பெண்களுக்காக சட்டீஸ்கரில் புதிடி வடிவ ஆம்புலன்ஸ்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com