Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் இதனை அறிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் இது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அந்த சட்டம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய முடியாதென்று கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் அதனை தள்ளுபடி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.

0 Responses to சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா என்பது குறித்து அரசிடம் கேள்வியெழுப்ப முடியாது: உயர்நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com