சண்டே லீடர் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் பொரளை பொது மயானத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் உடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் இன்று காலை 08.30 மணிக்கு லசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். களுபோவில வைத்தியசாலையில் அப்போது முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் குறைபாடுகள் இருப்பதால், அதனை நிவர்த்தி செய்ய அவரின் உடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

0 Responses to லசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது!