Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து டெல்லி போலீசார் டிடிவி தினகரனிடம் நேற்று விசாரணை நடத்தினர். சென்னைக்கு இன்று அழைத்து வந்து விசாரணை நடத்துகின்றனர். இரட்டை இலை சின்னத்தை இலஞ்சம் கொடுத்து கைப்பற்ற இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி தினகரன் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசினர். முதற்கட்டமாக கொடுக்கப்பட்ட ரூ.1.30 கோடி பணத்துடன் டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த போது டெல்லி போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர்.

பின்னர், சுகேஷ் சந்திரசேகர் 8 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் தீஸ்ஹாசரே மாவட்ட நீதிபதி பூணம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார்.

அப்போது நீதிபதி டிடிவி தினகரனிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தியும் ஏன் இன்னும் அவரை கைது செய்ய வில்லை என்று டெல்லி போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். அதைதொடர்ந்து நேற்று முன்தினம் 4வது நாள் விசாரணையின் இறுதியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் போலீசார் கைது செய்தனர்.

அதைதொடர்ந்து நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு தீஸ்ஹாசரே மாவட்ட நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவையும் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் நீதிபதி பூணம் சவுத்ரி முன்பு ஆஜர்படுத்தினார். அப்போது டிடிவி.தினகரன் வக்கீல் விக்ணேஷ் பவா, டிடிவி.தினகரனை ஏற்கனவே 4 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அவரை ஜாமினில் விட வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய பூணம் சவுத்ரி இது மற்ற வழக்கு போல் இல்லை. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கட்சியின் சின்னத்தை பெற இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு. இதனால் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்.
அதைதொடர்ந்து டிடிவி தினகரனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி ‘டிடிவி.தினகரனிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளீர்கள். மேலும் 7 நாட்கள் விசாரணை நடத்த ஏன் அனுமதி வேண்டும்’ என்றார்.

அதற்கு போலீஸ் தரப்பில் கைது செய்யப்பட்ட நபர்களை சென்னை, பெங்களூரு, கொச்சின் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கில் பரிமாற்றம் நடந்த, ரூ.1.30 கோடி ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அவர்களிடம் விசாரணை நடத்த 7 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கூறினர்.

மேலும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய தொலை பேசி உரையாடலை நீதிபதி முன்பு போலீசார் சமர்ப்பித்தனர். பின்னர் நீதிபதி 5 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

0 Responses to டிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழைத்து வந்து இன்று விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com