தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அந்த அமைப்பின் மீதான தடையை விலக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் எலினோர் ஷாப்ரென் (Eleanor Sharpston) பரிந்துரை செய்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபரின் இந்தப் பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. ஆயினும், தொடர்ச்சியாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு விடுக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பரிந்துரை!