எகிப்து கடற்கரைக்கு அண்மையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய படகில் பயணித்த 133 பயணிகளின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப் பட்டுள்ளன.
இதன் மூலம் இவ்விபத்தில் பலி எண்ணிக்கையும் 133 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் தப்பிய அகதிகள் சிலரின் கூற்றுப்படி எகிப்தில் இருந்து இத்தாலி நோக்கி புறப்படும் போது புதன்கிழமை துறைமுக நகரான றொசெட்டா நகருக்கு அண்மையில் இப்படகு சிக்கியதாகவும் சிறிய ரக மீன்பிடிக் கப்பலான இதில் அளவுக்கு மீறி 450 பேர் பயணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடிப் படகான இதில் விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் தொகை 133 என எகிப்து சுகாதார அமைச்சும் அறிவித்துள்ளது. எகிப்து இராணுவத்தின் கூற்றுப்படி இதுவரை அவர்கள் 163 பேரை மீட்டிருப்பதாகவும், மீட்பு நடவடிக்கை தொடர்வதாகவும் அறிவித்துள்ளது. சராசரியாக 200 பேரை உள்வாங்கக் கூடிய இப்படகில் 400 இற்கும் அதிகமானவர்கள் பயணித்தது ஐரோப்பாவில் நிம்மதியான வாழ்வைத் தேடி என ஒரு அகதியும், படகு நீரில் மூழ்கிய பின் அனைவருக்கும் தேவையாக இருந்தது தாம் காப்பாற்றப் பட வேண்டும் என்பதே என்றும் தான் மட்டும் 10 கிலோமீட்டர் நீந்திக் கரை சேர்ந்தேன் என இன்னொரு அகதியும் தெரிவித்துள்ளனர்.
மத்திய தரைக் கடலில் அகதிகள் படகு விபத்துக்களில் பலியான எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது இவ்வருடமே என ஐ.நா அகதிகள் பிரிவு தெரிவித்துள்ள நிலையில் இவர்களை சட்ட விரோதமாக ஏற்றி வந்த 4 ஆள்கடத்தல் நபர்களை எகிப்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் குடிவரவுக்கான சர்வதேச அமைப்பு அளித்த தகவலில் மீட்கப் பட்ட அகதிகளில் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள் எனவும் இதைத் தவிர சூடானியர்கள், எரித்ரியர்கள், சிரியர்கள் மற்றும் எதியோப்பியர்களும் அடங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதைவிட வெள்ளிக்கிழமை எகிப்தின் வடக்குக் கடற்கரையை சட்ட விரோதமாகக் கடக்க முயன்ற சுமார் 4600 சூடான் மற்றும் எதியோப்பியர்கள் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் ஐ.நா அகதிகள்பிரிவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மத்திய தரைக் கடலைக் கடக்க முயன்ற 10 000 இற்கும் அதிகமான மக்கள் நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளனர். இருந்த போதும் இவ்வருடம் குறைந்தது 300 000 அகதிகள் இதுவரை மத்திய தரைக் கடலைக் கடந்துள்ளனர்.

0 Responses to எகிப்து படகு விபத்தில் 133 அகதிகளின் சடலங்கள் கைப்பற்றப் பட்டன..