Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக 2 வருடங்களுக்கு முன்னர் சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகள் கடத்திய 200 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் குறித்த மாணவிகள் தமது குடும்பத்தினருடன் இணைக்கவும் பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளதாக USA Today பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள சிபோக் கிராமத்தில் இருந்து 200 இற்கும் அதிகமான பள்ளி மாணவிகளை போக்கோ ஹராம் போராளிகள் கடத்திச் சென்றதை அடுத்து #BringBackOurGirls என்ற பிரச்சாரம் மிகவும் தீவிரமாகப் பரவிய போதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப் படவில்லை. இந்நிலையில் குறித்த அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் விடுவிக்கப் பட்ட 21 மாணவிகளும் தமது குடும்பத்தினருடன் இணைக்கப் பட்ட வைபவத்தில் குறித்த மாணவிகள் எவ்வாறு சிரமங்களை எதிர் கொண்டனர், எவ்வாறு வலுக்கட்டாயமாக கிறித்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப் பட்டனர் மற்றும் எவ்வாறு வலிந்து திருமணம் செய்து வைக்கப் பட்டார்கள் என்றும் சில மாணவிகள் விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் சுவிட்சர்லாந்து அரசும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாகக் குறித்த மாணவிகள் விடுவிக்கப் பட்டார்கள் என்றும் இதன் மூலம் மேலும் பல மாணவிகள் விடுவிக்கப் படுவதற்கான சாதகமும் உள்ளது என்றும் பிபிசி ஊடகத்திலும் அறிவிக்கப் பட்டுள்ளதாக USA Today தெரிவித்துள்ளது. இதை விட விடுவிக்கப் பட்ட மாணவிகளின் கூற்றில் இருந்து போக்கோ ஹராம் வசம் இன்னமும்  83 மாணவியரே உள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. நைஜீரிய அரசோ இந்த அனைத்து மாணவியரையும் விடுவிக்க போக்கோ ஹராமுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே 197 சிறுமிகள் காணாமாற் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 போக்கோ ஹராம் அமைப்பின் 4 முக்கிய தலைவர்களை விடுவித்து அதற்குப் பதிலாகவே நைஜீரிய அரசு குறித்த 21 மாணவியர்களையும் மீட்டுக் கொண்டதாக நைஜீரியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் லாய் மொஹம்மட் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முயற்சியின் போது பெரும் பணம் கோரப் பட்டதற்குத் தாம் இணங்கவில்லை எனவும் நைஜீரிய அரசு கூறியுள்ளது.

0 Responses to 2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com