Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார். 

'கிரிஷ்' திட்டம் தொடர்பில் கைது செய்தமையானது தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தே அவர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க அடிப்படையற்ற குற்றச்சாட்டை நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்வைத்திருந்ததாக நாமல் ராஜபக்ஷ தன்னுடைய மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு அமைய கைதுசெய்து ஒரு வாரம் தடுத்துவைத்தமையானது அரசியல்வாதியான தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கட்டுமான நிறுவனமான "கிரிஷ்" லங்கா பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் கொழும்பில் அமைக்கவிருந்த கலப்புத்திட்டத்தில் 70 மில்லியன் ரூபாவை மோசடியாக நாமல் ராஜபக்ஷ பெற்றுக் கொண்டதாக கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த இவர் கடந்த ஜூலை 18ஆம் திகதி கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நிதி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஏ.ரணவக்க, சப் இன்ஸ்பெக்டர் ஷாந்த லால் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், 200 மில்லியன் ரூபா நஷ்டஈடும் கோரியுள்ளார். போலியான குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி தன்னை கைது செய்தமையானது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ அவருடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக 200 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நாமல் வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com