நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதை பலரும் விரும்புகின்றனர். ஆனால், அதனை நீக்கிவிட்டு எந்த முறைக்கு செல்வது?, மீண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் முறைக்கு செல்வதா அல்லது கலப்பு முறைக்கு செல்வதா?, என்கிற கேள்வியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன எழுப்பியுள்ளார்.
இராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் இறுதி வரைபினை சமர்ப்பிப்பதற்கான காலம் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய அவர், ஆயினும், அரசியலமைப்பு வரைவினை சமர்ப்பிப்பதற்கான காலம் தாழ்த்தப்படுவதனை தான் தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை நவம்பர் மாதம் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படுமென வழிப்படுத்தல் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்ட ஆறு உப குழுக்களும் தமது அறிக்கைகளை வழிப்படுத்தல் குழுவிடம் ஒப்படைத்துள்ளன. நிறைவேற்று ஜனாதிபதி முறை, அதிகார பரவலாக்கம் மற்றும் புதிய தேர்தல் முறை என்பன தொடர்பில் குறித்த அறிக்கையில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் பட்சத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள பெற வேண்டும். ஆயினும், மத்திய அரசாங்கம் மாகாண சபைகள் மீது தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ள கூடாது என்பதுவும் உறுதி செய்யப்பட வேண்டும்.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் காலத்துக்கேற்ப பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டி இருப்பதனால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இதுவே சிறந்த தருணமாகும்.
அரசியலமைப்புகள் நீடித்து நிலைப்பதில்லை. இருந்தாலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. அதனால் அனைத்து கட்சிகளும் இவ்விடயத்தில் நெகிழ்வு தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டால் அதனை எதனைக் கொண்டு ஈடு செய்வது?; ஜயம்பதி விக்ரமரட்ன கேள்வி!