Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.

கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. கடந்த டிசம்பர் மாதமே 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் அதிநவீன எஸ்–400 ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் இறுதிசெய்தது. 

அதிநவீன எஸ்–400 ஏவுகணையானது பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகளை மிரட்டி வைக்க உதவியாக இருக்கும். ஆனால் சீனா நமக்கு முன்பாகவே இதே ஏவுகணைகளை ரஷ்யாவிடம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்து முடித்துவிட்டது. தைவான் நாட்டை அச்சுறுத்துவதற்காக சீனா, ரஷியாவிடம் இருந்து 6 அதிநவீன எஸ்–400 ரக ஏவுகணையை ரஷியாவிடம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளது.

அதிநவீன எஸ்–400 ஏவுகணைகள் இந்தியா ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் அஞ்சும் பிரம்மாஸ்திரம் போன்ற ஆயுதமாகும். இது மறைந்திருந்து தாக்கி எதிரிகளின் அத்தனை இலக்குகளையும் ஒரே நேரத்தில் அழிக்கும் வல்லமை படைத்தது. நம்மை நோக்கி சீறிவரும் எந்த ஏவுகணையையும் வழிமறித்து அழிக்கும் வல்லமையும் இதற்கு உண்டு. மேலும் இது அமெரிக்காவின் மறைந்திருந்து தாக்கும் சூப்பர் பவர் ஆயுதமான எஃப்-35 ஜெட் போல ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தகர்க்கும் திறன் கொண்டது. 

இதன் ரேடார்கள் மிகவும் சக்தி படைத்தவை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி இந்தியா வாங்கவிருக்கும் 5 எஸ்-400 ஏவுகணைகளில் மூன்றை மேற்கில் பாகிஸ்தானை நோக்கியும், இரண்டை கிழக்கில் சீனாவை நோக்கியும் நிறுத்தபோவதாக தெரிகிறது.

0 Responses to ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com