Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,தமிழ்நாடு அமைந்த 60 ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளாகும். சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழிவழியாக தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம் வரை தமிழகம் ஒரே நாடாக இருந்ததில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கு உரியதான தமிழ்நாடு உருவான நாளை நாம் மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும். 

அதிலும் குறிப்பாக இவ்வாண்டு, தமிழ்நாடு உருவாக்கப்பட்டு 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிறப்புமிக்க இந்நாளை தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும். 

தமிழகத் திருநாள்  60 என்ற பெயரில் நவம்பர் முதல் நாளில் தொடங்கி அம்மாதம் இறுதி வரை மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாட வேண்டும். கொடியேற்றியும் இனிப்பு வழங்கியும் மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தியும் கொண்டாடுமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக்கொள்கிறேன்.என்று பழ.நெடுமாறன் அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to தமிழ்நாடு அமைந்த 60ஆம் ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாடுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com