Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜியத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் பிரசன்னத்தை அடுத்து அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பெல்ஜியத்தின் தலைநகர் புருஸ்ஸெல்ஸில் இருந்து 50 Km தெற்கே உள்ள சட்டெலினேயு என்ற கடைக்குள் மர்ம நபர்கள்  சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்தே சனிக்கிழமை காலை உடனடியாக குறித்த அங்காடித் தொகுதியில் இருந்து பொதுமக்கள் போலிசாரால் வெளியேற்றப் பட்டனர்.

பெல்ஜியத்தின் லா கஷெட்டே என்ற உள்ளூர் பத்திரிகை குறித்த கடைக்குள் குறைந்த பட்சம் 3 மர்ம நபர்களே இருந்ததாகவும் இவர்களின் நோக்கம் கொள்ளையடித்தலே  என்றும் தெரிவித்துள்ள போதும் போலிஸ் தரப்பில் சரியாக எத்தனை துப்பாக்கிதாரிகள் இருந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. கலாஷ்னிகோவ் ரக ரைஃபிள் துப்பாக்கியினைக் குறித்த மர்ம நபர்கள் உபயோகித்ததாகவும் இச்சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் போலிசார் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

மார்ச் மாதம் புருஸ்ஸெல்ஸில் ISIS போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய சம்பவம் தொடர்பில் உள்ளூர் போலிசாரும் அரச அதிகாரிகளும் உடனடியாகத் தகவல் எதுவும் அளிக்கவில்லை.

0 Responses to ஆயுதம் தாங்கிய நபர்களின் பிரசன்னத்தை அடுத்து பெல்ஜியம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள் வெளியேற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com