Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2012 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து விக்கிலீக்ஸ் இணையத் தாபகரான ஜூலியன் அசாஞ்சே தென்னமெரிக்க நாடான எக்குவடோரின் இலண்டன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அண்மையில் இவரது இணையப் பாவனைக்குத் தீவிர தடைகளை விதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை எக்குவடோர் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிங்டன் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அசாஞ்சே அறிவித்திருந்த நிலையில் எக்குவடோர் அரசுக்கு அமெரிக்கா விதித்த அழுத்தம் காரணமாக இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.

இந்நிலையில் எக்குவடோர் நாட்டின் இடதுசாரி அரசு விடுத்த அறிக்கையில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிடும் முடிவு முற்றிலும் விக்கிலீக்ஸ் ஐச் சார்ந்தது என்றும் எமது நாடு இதற்கான அழுத்தத்தை வெளிநாடுகளிடம் இருந்து ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அசாஞ்சே இன் இணையப் பாவனை ஞாயிறு முதல் தடை செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதற்கு எக்குவடோர் நாட்டின் இறையாண்மைக்காக ஜூலியன் அசாஞ்சே இனது தகவல் தொடர்பு தற்காலிகமாக முடக்கப் பட்டுள்ளது என அரசு சார்பாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

ஆயினும் அசாஞ்சேயின் இணையப் பாவனை முடக்கப் பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க மாநில அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அசாஞ்சேயின் பேச்சு சுதந்திரத்துக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வரும் எக்குவடோர் அதிபர் ரஃபேல் கொர்ரேயா அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிங்டனுக்கும் பொது மேடைகளில் ஆதரவளித்துப் பேசி வருவதும் நோக்கத்தக்கது.

0 Responses to விக்கிலீக்ஸ் தாபகர் ஜூலியன் அசாஞ்சேயின் இணையப் பாவனை முடக்கம்! : எக்குவடோர் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com