யாழ்.கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரு இளைஞர்களின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடை நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ஆரம்பித்துள்ளனர்.
மேலும், நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டமை இந்த சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.
எனினும் குறித்த இளைஞர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளிவரும் வரை இந்த சந்தேகங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ் மாணவர்கள் மரணம் - ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது!