இலங்கையில் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையீனங்கள் பாரியளவில் காணப்படுவதாக சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதை சகல இனங்களும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்திருந்த ரீட்டா இசாக் நதியா, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சிறுபான்மை இனத்தவர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் அரசியல் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
தனது விஜயத்தை பூர்த்திசெய்யும் முகமாக நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரீட்டா இசாக் நதியா இவற்றைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையர் என்ற அடையாளம் மற்றும் தேசத்தின் தேசியம் என்பன சகல இலங்கையரும் ஒற்றுமையாக இருப்பதையும், நட்புடன் இருப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பு, இடைக்கால நீதி, கொள்கைத் தயாரிப்பு, யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை நீக்குதல், உடல்ரீதியான வன்முறைகள் தொடராதிருத்தல் போன்ற முக்கியமான நல்லிணக்க செயற்பாடுகளை நாடு முன்னெடுத்துள்ளது.
கடந்தகால செயற்பாடுகளான கலாசார அடக்குமுறை, வெளிப்பாட்டுக்கான அடக்குமுறை, இனரீதியான சகிப்பின்மை, பாரபட்சம் காட்டுதல் போன்றவை சமூக, கலாசார ஒழுக்கநெறிகளை, அடையாள உணர்வை, நம்பிக்கை என்பவற்றை மோசமாகப் பாதிக்கலாம்.
உண்மையை கண்டறிதல், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை அரசாங்கம் அமுல்படுத்தும் அதேநேரம், உளரீதியான செயற்றிட்டங்கள், உளவள உதவிகள், தலையீடுகளுக்கு உதவுதல் போன்ற பொது மக்களின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களை ஆற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் குறிப்பாக பெண்கள் தமது கடந்தகால கஷ்டங்களிலிருந்து மீள்வதற்கு உளவியல் சமூக உதவிகளை மேலும் மாததமின்றி முன்னெடுப்பது கட்டாயமானது.
உண்மையை கண்டறிதல், நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தல் என்பன ஒரே இரவில் மேற்கொள்ள முடியாதவை. அதற்காக 2015ஆம் ஆண்டு புதிய நிர்வாகத்தால் அரசு பெறப்பட்ட உத்வேகத்தை இழக்கக் கூடாது. இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் நோக்கத்தை தெளிவாகக் கூறுவதற்கான உறுதிப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், முக்கியமானதும் அவசரமானதுமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.
இது காணிகள் தொடர்ந்தும் உரிமையாளர்களிடம் வழங்கப்படுதல், பாதுகாப்புக் காரணங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ள சகலரையும் விடுவித்தல், காணாமற்போனவர்களைக் கண்டறிதல், இராணுவ அதிகாரங்களை சிவில் அதிகாரிகளுக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகள் மற்றும் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம், மாகாணசபை அதிகாரிகள், சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினர், கல்வியாளர்கள், சுகாதார பிரிவினர் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தனிப்பட்ட சட்டங்கள், குறிப்பாக 1951ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்துச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச மனித உரிமைத் தரத்துக்கு உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்கள் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன: ரீட்டா இசாக் நதியா