கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்கும் பணிகளை, கோவாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமின் புதீன் இருவரும் காணொளிக் கட்சி மூலம் துவக்கி வைத்தனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு கோவாவில் நடைப்பெற்று வருகிறது.இதில் கலந்துக்கொள்ள ரஷ்ய அதிபர் கோவா வந்திருக்கும் நிலையில், ரஷ்ய நாட்டு உதவியுடன் இயங்கி வரும் கூடங்குளம் அணு உலையில் ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் அணு உலையில் மின் உற்பத்தி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் கை எழுத்தாகி இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் படி இன்று நரேந்திர மோடி-விளாடிமின் புதீன் இருவரும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகளை காணொளிக் காட்சி மூலம் கோவாவிலிருந்து துவக்கி வைத்தனர்.
பின்னர் இரு நாட்டு உறவு முறை, பயங்கரவாத ஒழிப்புக்கு துணை நிற்பது குறித்து இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருப்பதுக் குறித்து இருவரும் பேசினார்கள் என்றும், இரு நாடுகளுக்கு இடையே 16 ஒப்பந்தங்கள் கை எழுத்தாகின என்றும் தெரிய வருகிறது.

0 Responses to கூடங்குளத்தில் மூன்றாம், நான்காம் அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொளிக் காட்சி மூலம் மோடி- புதீன் துவக்கி வைப்பு!