Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிடுவோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வினை அடைவதற்கு கிடைத்திருக்கின்ற தற்போதையை வாய்ப்பினை யாருமே தவற விடக்கூடாது. தவறவிட்டால், அரசியல் தீர்வினை என்றைக்குமே அடைய முடியாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம் தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு தீனிபோடப்படுகின்றது. அவற்றை தவிர்க்குமாறு நாங்கள் கோருகின்றோம். அதாவது தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது. மூளையை பாவித்து செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to அரசியல் தீர்வை அடைவதற்கான இறுதிப் பேருந்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது: டிலான் பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com