மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுத்து உள்ளனர்.
கடந்த 1995ம் ஆண்டு, மதத்தின் பெயரால் வாக்கு சேகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவானது. இந்த வழக்கின் விசாரணையை இப்போது உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கையில் எடுத்துள்ளது.இந்துத்வாவை வலியுறுத்தி, வாக்கு சேகரிப்பதில் தவறில்லை என்கிற தீர்ப்புக்கு எதிராகவும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.
பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டி,ல் மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது என்பது மத துஷ்பிரயோகம் என்றும், இதற்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதத்தின் பெயரால் அரசியல் தனிமைப்படுத்தப் படுவதை நீதிமன்றம் பார்த்துக்கொண்டு வெறுமனே இருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை!