பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை என்று நடிகையும், முன்னாள் எம்பியுமான ரம்யா காவிரி உயர் தொழில் நுட்ப குழுவினரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி காவிரி உயர் தொழில் நுட்ப குழு, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய சென்றது. அப்போது அக்குழுவினரை சந்தித்த ரம்யா,மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், காவிரி நதிப்படுகை அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. இப்பகுதி குடிநீர் மற்றும் பாசனநீர் தேவையை நிறைவு செய்யக்கூட தண்ணீர் இல்லை. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது எப்படி சாத்தியம்?
மழை பொய்த்துப்போகும் பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை என்பதால் அப்படிப்பட்ட காலங்களில் கர்நாடகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, பேரிடர்கால நதிநீர் பங்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று தனது மனுவில் ரம்யா குறிப்பிட்டிருந்தார்.

0 Responses to பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை: ரம்யா