குடியரசு தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்வு செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் ராஜ்யசபா தலைவர் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், குடியரசு தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய வேண்டும். அவரது திறமையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உள்நாட்டு விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ள அவர், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல், தனது பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறார்.என்று கூறினார்.
மேலும், பிரணாப்பை மீண்டும் குடியரசு தலைவராக தேர்வு செய்ய பிற கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து, கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். மரியாதை நிமித்தமாக பிராணாப்பை அடுத்த வாரம் சந்திக்க உள்ளேன். அப்போது, சிறந்த குடியரசுத் தலைவராக நிரூபித்து விட்டீர்கள் என அவரிடம் தெரிவிக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

0 Responses to குடியரசு தலைவராக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்வு செய்ய வேண்டும்:சிவசேனா