இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்- ஓ- ஷா (Prayut Chan-o-cha) தெரிவித்துள்ளார்.
ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று சனிக்கிழமை பாங்கொக் நகரில் இடம்பெற்றது. அதன்போதே, தாய்லாந்து பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோரை உற்சாகமாக வரவேற்றனர். தலைவர்கள் இருவருக்கிடையிலும் நட்பு ரீதியான கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையால் ஆரம்பமானது.
இலங்கைக்கு என்றும் தாய்லாந்து அரசு வழங்கும் ஒத்துழைப்புகளை பாராட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரி அனர்த்தங்களின்போது இலங்கை மக்களுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறையின் தொடர்புகளை மேலும் முற்னேற்றுவது தொடர்பில் இரு தலைவர்களும் இதன்போது விரிவாக கலந்துரையாடினர்.
பௌத்த நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் அனைத்து துறைகளையும் வலுவூட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டிய தாய்லாந்துப் பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இலங்கை அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைப்பற்றி தெளிபடுத்திய ஜனாதிபதி, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்கு தமது அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலமும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தி, சுதந்திரமான ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்புவதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

0 Responses to இருதரப்பு உறவுகளை புதிய வடிவில் வலுவூட்ட ஆர்வம்; மைத்திரியிடம் தாய்லாந்து பிரதமர் தெரிவிப்பு!