Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘நாட்டைப் பிளவுபடுத்தும் ரணில்- மைத்திரி கூட்டு ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்கள். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நானும் தயாராக இருக்கின்றேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இரத்தினப்புரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “இந்த மக்கள் தொகையை பார்த்து பவித்ரா வன்னியாராச்சியை விலக்கியது  முட்டாள்தனம் என கூட மைத்திரிபால சிறிசேன சிந்திக்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியவர்கள் மக்கள் செல்வாக்கை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொள்கையில் இருந்தே  செயற்படுகின்றோம்.  ஆனால், தற்போது சுதந்திர கட்சியை  யானையின் பின்பக்கம் கொண்டு போய் வைத்துள்ளனர்.  எனக்கு  யாருடனும் தனிப்பட்ட  கோபம் இல்லை. நாட்டை  துண்டாட தயாராகின்றனர். அரசியலமைப்பில் உரிமைகளை பறித்து சதியை செய்கின்றனர்.  அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏலத்தில் விடுகின்றனர். எனவே மாற்றம் வேண்டும்.

மக்கள் எதிர்பார்ப்பதை கொடுப்பதற்கு  நான் தயாராக உள்ளேன். அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து செல்வதற்கு  தேவையான அனைத்து பணிகளையும் முன்னெடுப்போம்.  எதற்கும் அச்சப்பட வேண்டாம். பாராளுமன்றத்தில் எண்ணிக்கையை அதிகரிப்பது கடினமான விடயமல்ல. அதற்கு பல வருடங்களும் தேவையில்லை.  நல்லாட்சியில் உள்ள பலர் எம்முடன் வருவார்கள்.  இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தால் தெரியும். இனி அனைத்து அமைச்சர்கள் பின்னாலும் ஆள் அனுப்புவார்கள்.

நான் இரகசியமாக சதி செய்பவன் அல்ல. வெள்ளிப்டையானவன். எதனையும் வெளிப்படையாக செய்வேன்.  இரவில் அப்பம் சாப்பிட்டு சதி செய்ய மாட்டேன். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டு வர நான் தாயாராக உள்ளேன். மூழ்குகின்ற கப்பலில் யாரும்  பயணிக்கமாட்டார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாவ முற்படுவர்.  இதுவே இனி நடக்க போகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to ரணில் - மைத்திரி கூட்டு ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராக இருக்கின்றேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com