இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார்.
அவர், இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பாக முதற்கட்ட பேச்சுக்களிலும் ஈடுபட்டிருந்தார்.
எனினும், இம்முறை எட்கா உடன்படிக்கை குறித்து அவர்எதுவித பேச்சுக்களிலும் ஈடுபடமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வரும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் முதலீட்டு விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று, இலங்கையிலுள்ள முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகிறார்